பாடல் 2283
காய் நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மா நிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்,
நூறு செறு ஆயினும் தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்,
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே, . . . .
கோடியாத்து நாடு பெரிது நந்தும்,
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போலத், . . . .
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.
யானை புக்க புலம்!