நூல்கள்›புறநானூறு›பாடல் 2282

பாடல் 2282

உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,

பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!

பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,

சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;

ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும், . . . .

மூத்தோன் வருக என்னாது, அவருள்

அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்;

வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,

மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே, . . . .

கற்கை நன்றே!

← பாடல் 2281பாடல் 2283 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்