நூல்கள்›புறநானூறு›பாடல் 2281

பாடல் 2281

உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்;

அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்!

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்,

புகழ்எனின், உயிருங் கொடுக்குவர், பழியெனின், . . . .

உலகுடன் பெறினும், கொள்ளலர், அயர்விலர்;

அன்ன மாட்சி அனைய ராகித்,

தமக்கென முயலா நோன்தாள்,

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.

பிறர்க்கென முயலுநர்!

← பாடல் 2280பாடல் 2282 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்