பாடல் 2280
மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில்,
கருங்கண் எயிற்றி காதல் மகனொடு
கான இரும் பிடிக் கன்று தலைக்கொள்ளும்,
பெருங்குறும்பு உடுத்த, வன்புல இருக்கைப்,
புலாஅ அம்பின், போர் அருங்கடி மிளை . . . .
வலாஅரோனே, வாய்வாள் பண்ணன்,
உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின்,
இன்னே சென்மதி நீயே, சென்று அவன்
பகைப்புலம் படரா அளவை, நின்
பசிப் பகைப் பரிசில் காட்டினை கொளற்கே . . . .
இன்னே சென்மதி!