நூல்கள்›புறநானூறு›பாடல் 2276

பாடல் 2276

ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர்,

வெளிறுகண் போகப் பன்னாள் திரங்கிப்,

பாடிப் பெற்ற பொன்னணி யானை,

தமர்எனின், யாவரும் புகுப; அமர்எனின்,

திங்களும் நுழையா எந்திரப் படுபுழைக், . . . .

கண்மாறு நீட்ட நணிநணி இருந்த

குறும்பல் குறும்பின் ததும்ப வைகிப்,

புளிச்சுவை வேட்ட செங்கண் ஆடவர்

தீம்புளிக் களாவொடு துடரி முனையின்,

மட்டுஅறல் நல்யாற்று எக்கர் ஏறிக், . . . .

கருங்கனி நாவல் இருந்துகொய்து உண்ணும்,

பெரும்பெயர் ஆதி, பிணங்கரில் குடநாட்டு,

எயினர் தந்த எய்ம்மான் எறிதசைப்

பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் அமலை,

வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய, . . . .

இரும்பனங் குடையின் மிசையும்

பெரும்புலர் வைகறைச் சீர்சா லாதே.

யானையும் பனங்குடையும்!

← பாடல் 2275பாடல் 2277 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்