நூல்கள்›புறநானூறு›பாடல் 2277

பாடல் 2277

கந்துமுனிந்து உயிர்க்கும்யானையொடு, பணைமுனிந்து,

கால்இயற் புரவி ஆலும் ஆங்கண்,

மணல்மலி முற்றம் புக்க சான்றோர்

உண்ணார் ஆயினும், தன்னொடு சூளுற்று

உண்மென இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன் . . . .

ஈண்டோர் இன்சா யலனே; வேண்டார்

எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின்,

கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய

நெடுமொழி மறந்த சிறுபே ராளர்

அஞ்சி நீங்கும் காலை, . . . .

ஏம மாகத் தான்முந் துறுமே.

இன்சாயலன் ஏமமாவான்!

← பாடல் 2276பாடல் 2278 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்