நூல்கள்›புறநானூறு›பாடல் 2274

பாடல் 2274

எந்தை; வாழி; ஆதனுங்க! என்

நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே;

நின்யான் மறப்பின், மறக்குங் காலை,

என்உயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும்,

என்யான் மறப்பின், மறக்குவென் - வென்வேல் . . . .

விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்

திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த

உலக இடைகழி அறைவாய் நிலைஇய

மலர்வாய் மண்டிலத் தன்ன, நாளும்

பலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே . . . .

என் நெஞ்சில் நினைக் காண்பார்!

← பாடல் 2273பாடல் 2275 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்