நூல்கள்›புறநானூறு›பாடல் 2273

பாடல் 2273

அணங்குடை அவுணர் கணம்கொண்டுஒளித்தெனச்,

சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,

இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து

இடும்பைகொள் பருவரல் தீரக், கடுந்திறல்

அஞ்சன் உருவன் தந்து நிறுத்தாங்கு, . . . .

அர சிழந்து இருந்த அல்லற் காலை,

முரசுஎழுந்து இரங்கும் முற்றமொடு, கரைபொருது

இரங்குபுனல் நெரிதரு மிகுபெருங் காவிரி

மல்லல் நன்னாட்டு அல்லல் தீரப்,

பொய்யா நாவிற் கபிலன் பாடிய, . . . .

மையணி நெடுவரை ஆங்கண் ஒய்யெனச்

செருப்புகல் மறவர் செல்புறம் கண்ட

எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை,

அருவழி இருந்த பெருவிறல் வளவன்

மதிமருள் வெண்குடை காட்டி, அக்குடை . . . .

புதுமையின் நிறுத்த புகழ்மேம் படுந!

விடர்ப்புலி பொறித்த கோட்டைச், சுடர்ப் பூண்,

சுரும்பார் கண்ணிப், பெரும்பெயர் நும்முன்

ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச்சென்று உணீஇயர்,

உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின், . . . .

ஆறுகொள் மருங்கின் மாதிரம் துழவும்

கவலை நெஞ்சத்து அவலந் தீர

நீதோன் றினையே - நிரைத்தார் அண்ணல்!

கல்கண் பொடியக், கானம் வெம்ப

மல்குநீர் வரைப்பில் கயம்பல உணங்கக், . . . .

கோடை நீடிய பைதறு காலை,

இருநிலம் நெளிய ஈண்டி,

உரும்உரறு கருவிய மழைபொழிந் தாங்கே!

அவலம் தீரத் தோன்றினாய்!

← பாடல் 2272பாடல் 2274 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்