பாடல் 2272
யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய,
பாணர் காண்க, இவன் கடும்பினது இடும்பை,
யாணர்ப் பழுமரம் புள் இமிழ்ந்தன்ன,
ஊண் ஒலி அரவம் தானும் கேட்கும்,
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி, . . . .
முட்டை கொண்டு வன்புலம் சேரும்,
சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்பச்,
சோறுடைக் கையர் வீறு வீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் கண்டும்,
மற்றும் மற்றும் வினவுதும் தெற்றெனப், . . . .
பசிப் பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே?
யான் வாழுநாள் வாழிய!