நூல்கள்›புறநானூறு›பாடல் 2271

பாடல் 2271

ஏற்றுக உலையே; ஆக்குக சோறே;

கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப்

பாடுவல் விறலியர் கோதையும் புனைக;

அன்னவை பலவும் செய்க; என்னதூஉம்

பரியல் வெண்டா வருபதம் நாடி, . . . .

ஐவனங் காவல் பெய்தீ நந்தின்.

ஒளிதிகழ் திருந்துமணி நளியிருள் அகற்றும்

வன்புல நாடன், வயமான் பிட்டன்;

ஆரமர் கடக்கும் வேலும், அவனிறை

மாவள் ஈகைக் கோதையும் . . . .

மாறுகொள் மன்னரும், வாழியர் நெடிதே!

பகைவரும் வாழ்க!

← பாடல் 2270பாடல் 2272 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்