நூல்கள்›புறநானூறு›பாடல் 2268

பாடல் 2268

நும்படை செல்லுங் காலை, அவர்படை

எறித்தெறி தானை முன்னரை எனாஅ,

அவர்படை வருஉங் காலை, நும்படைக்

கூழை தாங்கிய, அகல் யாற்றுக்

குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ, . . . .

அரிதால், பெரும! நின் செவ்வி என்றும்;

பெரிதால் அத்தை, என் கடும்பினது இடும்பை;

இன்னே விடுமதி பரிசில்! வென்வேல்

இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்,

இகலினர் எறிந்த அகல்இலை முருக்கின் . . . .

பெருமரக் கம்பம் போலப்,

பொருநர்க்கு உலையாநின் வலன் வாழியவே!

தருக பெருமானே!

← பாடல் 2267பாடல் 2269 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்