நூல்கள்›புறநானூறு›பாடல் 2267

பாடல் 2267

அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்

கறிவளர் அடுக்கத்து மலரந்த காந்தள்

கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக், கிளையொடு,

கடுங்கண் கேழல் உழுத பூழி,

நன்னாள் வருபதம் நோக்கிக், குறவர் . . . .

உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை

முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்,

மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்,

மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி

வான்கேழ் இரும்புடை கழாஅது, ஏற்றிச், . . . .

சாந்த விறகின் உவித்த புன்கம்,

கூதளங் கவினிய குளவி முன்றில்,

செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்

ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்,

நறைநார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி, . . . .

வடிநவில் அம்பின் வில்லோர் பெரும!

கைவள் ஈகைக் கடுமான் கொற்ற!

வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்,

பொய்யாச் செந்நா நெளிய ஏத்திப்

பாடுப என்ப பரிசிலர், நாளும்; . . . .

ஈயா மன்னர் நாண,

வீயாது பரந்தநின் வசையில் வான் புகழே!

கேழல் உழுத புழுதி!

← பாடல் 2266பாடல் 2268 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்