நூல்கள்›புறநானூறு›பாடல் 2266

பாடல் 2266

நீயே, அமர்காணின் அமர்கடந்து, அவர்

படை விலக்கி எதிர் நிற்றலின்,

வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கை யொடு,

கேள்விக்கு இனியை, கட்கின் னாயே!

அவரே, நிற்காணின் புறங் கொடுத்தலின், . . . .

ஊறுஅறியா மெய் யாக்கை யொடு.

கண்ணுக்கு இனியர்; செவிக்குஇன் னாரே!

அதனால், நீயும் ஒன்று இனியை; அவரும்ஒன்றுஇனியர்;

ஒவ்வா யாவுள, மற்றே? வெல்போர்க்

கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி! . . . .

நின்னை வியக்குமிவ் வுலகம்; அது

என்னோ? பெரும! உரைத்திசின் எமக்கே.

ஒவ்வொருவரும் இனியர்!

← பாடல் 2265பாடல் 2267 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்