நூல்கள்›புறநானூறு›பாடல் 2263

பாடல் 2263

ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின்

ஆம்பி பூப்பத் தேம்பு பசி உழவாப்

பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி

இல்லி தூர்த்த பொல்லா வறு முலை

சுவைத்தொறும் அழூஉம் தன் மகத்துவம் நோக்கி . . . .

நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழைக் கண் என்

மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ

நிற் படர்ந்திசினே நற்போர்க் குமண

என் நிலை அறிந்தனை ஆயின் இந்நிலைத்

தொடுத்தும் கொள்ளாது அமையலென் அடுக்கிய . . . .

பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ்

மண் அமை முழவின் வயிரியர்

இன்மை தீர்க்கும் குடிப் பிறந்தோயே.

வளைத்தாயினும் கொள்வேன்!

← பாடல் 2262பாடல் 2264 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்