நூல்கள்›புறநானூறு›பாடல் 2262

பாடல் 2262

நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்,

பன் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும்,

கடும்பின் கடும் பசி தீர யாழ நின்

நெடுங்குறி எதிர்ப்பை நல்கியோர்க்கும்,

இன்னோர்க்கு என்னாது, என்னோடும் சூழாது, . . . .

வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்

எல்லோர்க்கும் கொடுமதி, மனை கிழவோயே,

பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்

திருந்து வேல் குமணன், நல்கிய வளனே.

தமிழ் உள்ளம்!

← பாடல் 2261பாடல் 2263 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்