நூல்கள்›புறநானூறு›பாடல் 2264

பாடல் 2264

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே

துன் அருஞ் சிறப்பின் உயர்ந்த செல்வர்

இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின்

தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே . . . .

தாள் தாழ் படு மணி இரட்டும் பூ நுதல்

ஆடியல் யானை பாடுநர்க்கு அருகாக்

கேடு இல் நல்லிசை வயமான் தோன்றலைப்

பாடி நின்றனென் ஆகக் கொன்னே

பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என் . . . .

நாடு இழந்ததனினும் நனி இன்னாது என

வாள் தந்தனனே தலை எனக்கு ஈயத்

தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்

ஆடு மலி உவகையோடு வருவல்

ஓடாப் பூட்கை நின் கிழமையோன் கண்டே . . . .

இழத்தலினும் இன்னாது!

← பாடல் 2263பாடல் 2265 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்