நூல்கள்›புறநானூறு›பாடல் 2260

பாடல் 2260

நீண்டொலி அழுவம் குறைய முகந்துகொண்டு,

ஈண்டுசெலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇப்

பெருமலை யன்ன தோன்றுதல், சூன்முதிர்பு,

உரும்உரறு கருவியொடு, பெயல்கடன் இறுத்து,

வள்மலை மாறிய என்றூழ்க் காலை, . . . .

மன்பதை யெல்லாம் சென்றுணர், கங்கைக்

கரைபொரு மலிநீர் நிறைந்து தோன்றியாங்கு,

எமக்கும் பிறர்க்கும் செம்மலை யாகலின்,

'அன்பில் ஆடவர் கொன்று, ஆறு கவரச்,

சென்று தலைவருந அல்ல, அன்பின்று, . . . .

வன்கலை தெவிட்டும், அருஞ்சுரம் இறந்தோர்க்கு,

இற்றை நாளொடும் யாண்டுதலைப் பெயர்' எனக்

கண் பொறி போகிய கசிவொடு, உரன்அழிந்து,

அருந்துயர் உழக்கும்என் பெருந்துன் புறுவி நின்

தாள்படு செல்வம் காண்டொறும் மருளப், . . . .

பனைமருள் தடக்கை யொடு முத்துப்படு முற்றிய

உயர்மருப்பு ஏந்திய வரைமருள் நோன்பகடு,

ஒளிதிகழ் ஓடை பொலிய, மருங்கில்

படுமணி இரட்ட, ஏறிச் செம்மாந்து,

செலல்நசைஇ உற்றனென் - விறல்மிகு குருசில்! . . . .

இன்மை துரப்ப, இசைதர வந்து, நின்

வண்மையில் தொடுத்தஎன் நயந்தினை கேண்மதி!

வல்லினும், வல்லேன் ஆயினும், வல்லே,

என்அளந்து அறிந்தனை நோக்காது, சிறந்த

நின் அளந்து அறிமதி, பெரும! என்றும் . . . .

வேந்தர் நாணப் பெயர்வேன்; சாந்தருந்திப்

பல்பொறிக் கொண்ட ஏந்துஎழில் அகலம்

மாண்இழை மகளிர் புல்லுதொறும் புகல,

நாள்முரசு இரங்கும் இடனுடை வரைப்பின்நின்

தாள்நிழல் வாழ்நர் நண்கலம் மிகுப்ப, . . . .

வாள் அமர் உயர்ந்தநின் தானையும்,

சீர்மிகு செல்வமும் ஏந்துகம் பலவே.

பின் நின்று துரத்தும்!

← பாடல் 2259பாடல் 2261 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்