நூல்கள்›புறநானூறு›பாடல் 2258

பாடல் 2258

'வாழும் நாளொடு யாண்டுபல உண்மையின்,

தீர்தல்செல் லாது, என் உயிர்' எனப் பலபுலந்து,

கோல்கால் ஆகக் குறும்பல ஒதுங்கி,

நூல்விரித் தன்ன கதுப்பினள், கண் துயின்று,

முன்றிற் போகா முதுர்வினள் யாயும்; . . . .

பசந்த மேனியொடு படர்அட வருந்தி,

மருங்கில் கொண்ட பல்குறு மாக்கள்

பிசைந்துதின வாடிய முலையள், பெரிது அழிந்து,

குப்பைக் கீரைக் கொய்கண் அகைத்த

முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு, உப்பின்று, . . . .

நீர்உலை யாக ஏற்றி, மோரின்று,

அவிழ்பதம் மறந்து, பாசடகு மிசைந்து,

மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியாத்,

துவ்வாள் ஆகிய என்வெய் யோளும்;

என்றாங்கு, இருவர் நெஞ்சமும் உவப்பக் கானவர் . . . .

கரிபுனம் மயக்கிய அகன்கண் கொல்லை.

ஐவனம் வித்தி, மையுறக் கவினி,

ஈனல் செல்லா ஏனற்கு இழுமெனக்

கருவி வானம் தலைஇ யாங்கும்,

ஈத்த நின்புகழ் ஏத்தித், தொக்க என், . . . .

பசிதினத் திரங்கிய, ஒக்கலும் உவப்ப

உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்,

தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென்; உவந்து, நீ

இன்புற விடுதி யாயின், சிறிது

குன்றியும் கொள்வல், கூர்வேற் குமண! . . . .

அதற்பட அருளல் வேண்டுவல் - விறற்புகழ்

வசையில் விழுத்திணைப் பிறந்த

இசைமேந் தோன்றல்! நிற் பாடிய யானே.

கொள்ளேன்! கொள்வேன்!

← பாடல் 2257பாடல் 2259 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்