நூல்கள்›புறநானூறு›பாடல் 2257

பாடல் 2257

முரசு கடிப்பு இகுப்பவும், வால் வளை துவைப்பவும்,

அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்

கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும்

பறம்பின் கோமான் பாரியும், பிறங்கு மிசைக்

கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும், . . . .

காரி ஊர்ந்து பேர் அமர்க் கடந்த

மாரி ஈகை மறப்போர் மலையனும்,

ஊராது ஏந்திய குதிரைக் கூர் வேல்

கூவிளங் கண்ணிக் கொடும் பூண் எழினியும்,

ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கும் நளி முழை . . . .

அருந்திறல் கடவுள் காக்கும் உயர் சிமைப்

பெருங்கல் நாடன் பேகனும், திருந்து மொழி

மோசி பாடிய ஆயும், ஆர்வமுற்று

உள்ளி வருநர் உலைவு நனி தீரத்

தள்ளாது ஈயும் தகை சால் வண்மைக் . . . .

கொள்ளார் ஓட்டிய நள்ளியும், என ஆங்கு

எழுவர் மாய்ந்த பின்றை, அழி வரப்

பாடி வருநரும் பிறருங் கூடி,

இரந்தோர் அற்றம் தீர்க்கு என விரைந்து, இவண்

உள்ளி வந்தனென் யானே, விசும்பு உறக் . . . .

கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி

ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று,

முள் புற முது கனி பெற்ற கடுவன்,

துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்,

அதிரா யாணர் முதிரத்துக் கிழவ, . . . .

இவண் விளங்கு சிறப்பின் இயல் தேர்க் குமண,

இசை மேந் தோன்றிய வண்மையொடு

பகை மேம்படுக, நீ ஏந்திய வேலே.

உள்ளி வந்தெனன் யானே!

← பாடல் 2256பாடல் 2258 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்