பாடல் 2253
திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்,
அறியுநர்க் காணின், வேட்கை நீக்கும்
சின்னீர் வினவுவர், மாந்தர்: அதுபோல்,
அரசர் உழைய ராகவும், புரைதபு
வள்ளியோர்ப் படர்குவர், புலவர்; அதனால், . . . .
'யானும், 'பெற்றது ஊதியம்; பேறியாது?' என்னேன்;
உற்றனென் ஆதலின் உள்ளிவந் தனனே;
'ஈயென இரத்தலோ அரிதே! நீ அது
நல்கினும், நல்காய் ஆயினும் வெல்போர்
எறிபடைக்கு ஓடா ஆண்மை, அறுவைத் . . . .
தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
தண்பல இழிதரும் அருவி நின்
கொண்டு பெருங்கானம், பாடல் எனக்கு எளிதே.
இரத்தல் அரிது! பாடல் எளிது!