நூல்கள்›புறநானூறு›பாடல் 2252

பாடல் 2252

மழையணி குன்றத்துக் கிழவன், நாளும்,

இழையணி யானை இரப்போர்க்கு ஈயும்,

சுடர்விடு பசும்பூண், சூர்ப்பு அமை முன்கை,

அடுபோர் ஆனா, ஆதன் ஓரி

மாரி வண்கொடை காணிய, நன்றும் . . . .

சென்றது மன், எம் கண்ணுளங் கடும்பே;

பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை

வால்நார்த் தொடுத்த கண்ணியும், கலனும்,

யானை இனத்தொடு பெற்றனர்; நீங்கிப்,

பசியார் ஆகல் மாறுகொல்; விசிபிணிக் . . . .

கூடுகொள் இன்னியம் கறங்க,

ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்தே?

கூத்தச் சுற்றத்தினர்!

← பாடல் 2251பாடல் 2253 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்