நூல்கள்›புறநானூறு›பாடல் 2250

பாடல் 2250

பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப,

விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்

கிழவன் சேட்புலம் படரின், இழை அணிந்து,

புன்தலை மடப்பிடி பரிசிலாகப்,

பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க் . . . .

கண்டீ ரக்கோன் ஆகலின், நன்றும்

முயங்கல் ஆன்றிசின், யானே: பொலந்தேர்

நன்னன் மருகன் அன்றியும், நீயும்

முயங்கற்கு ஒத்தனை மன்னே: வயங்கு மொழிப்

பாடுநர்க்கு அடைத்த கதவின், ஆடு மழை . . . .

அணங்குசால் அடுக்கம் பொழியும் நும்

மணங்கமழ் மால்வரை வரைந்தனர், எமரே.

அடைத்த கதவினை!

← பாடல் 2249பாடல் 2251 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்