நூல்கள்›புறநானூறு›பாடல் 2249

பாடல் 2249

கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன

பாறிய சிதாரேன், பலவுமுதல் பொருந்தித்,

தன்னும் உள்ளேன், பிறிதுபுலம் படர்ந்த என்

உயங்குபடர் வருத்தமும் உலைவும் நோக்கி,

மான்கணம் தொலைச்சிய குருதியங் கழற்கால், . . . .

வான்கதிர்த் திருமணி விளங்கும் சென்னிச்,

செல்வத் தோன்றல், ஓர் வல்வில் வேட்டுவன்,

தொழுதனென் எழுவேற் கைகவித்து இரீஇ,

இழுதின் அன்ன வால்நிணக் கொழுங்குறை,

கான்அதர் மயங்கிய இளையர் வல்லே, . . . .

தாம்வந்து எய்தா அளவை, ஒய்யெனத்

தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, நின்

இரும்பேர் ஒக்கலொடு தின்ம் எனத் தருதலின்,

அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி,

நல்மரன் நளிய நறுந்தண் சாரல், . . . .

கல்மிசை அருவி தண்ணெனப் பருகி,

விடுத்தல் தொடங்கினேன் ஆக, வல்லே,

பெறுதற் கரிய வீறுசால் நன்கலம்

பிறிதொன்று இல்லை; காட்டு நாட்டோம் என,

மார்பிற் பூண்ட வயங்குகாழ் ஆரம் . . . .

மடைசெறி முன்கை கடகமொடு ஈத்தனன்;

எந்நா டோ? என, நாடும் சொல்லான்!

யாரீ ரோ! எனப், பேரும் சொல்லான்;

பிறர்பிறர் கூற வழிக்கேட் டிசினே;

இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி . . . .

அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின்

பளிங்கு வகுத் தன்ன தீநீர்,

நளிமலை நாடன் நள்ளிஅவன் எனவே.

நளி மலை நாடன்!

← பாடல் 2248பாடல் 2250 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்