நூல்கள்›புறநானூறு›பாடல் 2245

பாடல் 2245

அன்னவாக நின் அருங்கல வெறுக்கை

அவை பெறல் வேண்டேம் அடு போர்ப் பேக!

சீறியாழ் செவ்வழி பண்ணி நின் வன்புல

நன்னாடு பாட என்னை நயந்து

பரிசில் நல்குவையாயின், குரிசில், நீ . . . .

நல்காமையின் நைவரச் சாஅய்,

அருந்துயர் உழக்கும், நின் திருந்திழை அரிவை

கலி மயில் கலாவம் கால் குவித்தன்ன

ஒலிமென் கூந்தல் கமழ் புகை கொளீஇத்

தண் கமழ் கோதை புனைய, . . . .

வண் பரி நெடுந்தேர் பூண்க நின் மாவே.

தேர் பூண்க மாவே!

← பாடல் 2244பாடல் 2246 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்