நூல்கள்›புறநானூறு›பாடல் 2244

பாடல் 2244

மடத்தகை மாமயில் பனிக்கும் என்று அருளிப்

படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்

கடாஅ யானைக் கலிமான் பேக!

பசித்தும் வாரோம், பாரமும் இலமே,

களங்கனியன்ன கருங்கோட்டுச் சீறியாழ் . . . .

நயம் புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி,

அறம் செய்தீமோ, அருள் வெய்யோய் என

இஃது யாம் இரந்த பரிசில் அஃது, இருளின்

இன மணி நெடுந்தேர் ஏறி

இன்னாது உறைவி அரும் படர் களைமே . . . .

அவள் இடர் களைவாய்!

← பாடல் 2243பாடல் 2245 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்