நூல்கள்›புறநானூறு›பாடல் 2243

பாடல் 2243

அருளாய் ஆகலோ கொடிதே! இருள் வரச்

சீறியாழ் செவ்வழி பண்ணி, யாழ நின்

கார் எதிர் கானம் பாடினேமாக,

நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண்

கலுழ்ந்து வார் அரிப் பனி பூண் அகம் நனைப்ப, . . . .

இனைதல் ஆனாளாக, “இளையோய்!

கிளையை மன் எம் கேள் வெய்யோற்கு” என

யாம் தன் தொழுதனம் வினவக், காந்தள்

முகை புரை விரலின் கண்ணீர் துடையா,

“யாம் அவன் கிளைஞரேம் அல்லேம், கேள்! இனி . . . .

எம் போல் ஒருத்தி நலன் நயந்து, என்றும்

வரூஉம் என்ப வயங்கு புகழ்ப் பேகன்

ஒல்லென ஒலிக்கும் தேரொடு

முல்லை வேலி நல்லூரானே”.

தோற்பது நும் குடியே!

← பாடல் 2242பாடல் 2244 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்