நூல்கள்›புறநானூறு›பாடல் 2242

பாடல் 2242

“மலைவான் கொள்க!” என உயர் பலி தூஉய்,

“மாரி ஆன்று மழை மேக்கு உயர்க” எனக்

கடவுள் பேணிய குறவர் மாக்கள்,

பெயல் கண் மாறிய உவகையர் சாரல்

புனத் தினை அயிலும் நாட! சினப் போர்க் . . . .

கைவள் ஈகைக் கடு மான் பேக!

யார் கொல் அளியள் தானே, நெருநல்

சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக்

குணில் பாய் முரசின் இரங்கும் அருவி

நளி இருஞ்சிலம்பின் சீறூர் ஆங்கண், . . . .

வாயில் தோன்றி வாழ்த்தி நின்று

நின்னும் நின் மலையும் பாட, இன்னாது

இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்,

முலையகம் நனைப்ப விம்மிக்,

குழல் இனைவது போல் அழுதனள் பெரிதே . . . .

யார்கொல் அளியள்!

← பாடல் 2241பாடல் 2243 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்