நூல்கள்›புறநானூறு›பாடல் 2241

பாடல் 2241

அறு குளத்து உகுத்தும், அகல் வயல் பொழிந்தும்,

உறுமிடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும்,

வரையா மரபின் மாரி போலக்,

கடாஅ யானைக் கழல் கால் பேகன்

கொடை மடம் படுதல் அல்லது, . . . .

படை மடம் படான், பிறர் படை மயக்குறினே.

கொடைமடமும் படைமடமும்!

← பாடல் 2240பாடல் 2242 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்