நூல்கள்›புறநானூறு›பாடல் 2240

பாடல் 2240

பாணன் சூடிய பசும்பொன் தாமரை

மாணிழை விறலி மாலையொடு விளங்கக்,

கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇ,

ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்!

யாரீ ரோ? என வனவல் ஆனாக், . . . .

காரென் ஒக்கல், கடும் பசி, இரவல!

வென்வேல் அண்ணல் காணா ஊங்கே,

நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே,

இன்னேம் ஆயினேம் மன்னே; என்றும்

உடாஅ, போரா ஆகுதல் அறிந்தும் . . . .

படா அம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ,

கடாஅ யானைக் கலிமான் பேகன்,

எத்துணை ஆயினும் ஈதல் நன்று என

மறுமை நோக்கின்றோ அன்றே,

பிறர், வறுமை நோக்கின்று, அவன் கைவண்மையே . . . .

மறுமை நோக்கின்று!

← பாடல் 2239பாடல் 2241 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்