நூல்கள்›புறநானூறு›பாடல் 2239

பாடல் 2239

தடவுநிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்

மடவன், மன்ற; செந்நாப் புலவீர்!

வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த

அடகின் கண்ணுறை ஆக யாம் சில

அரிசி வேண்டினெம் ஆகத், தான் பிற . . . .

வரிசை அறிதலின் தன்னும் தூக்கி.

இருங்கடறு வளைஇய குன்றத் தன்ன ஓர்

பெருங்களிறு நல்கியோனே; அன்னதோர்

தேற்றா ஈகையும் உளதுகொல்?

போற்றார் அம்ம, பெரியோர் தம் கடனே? . . . .

தேற்றா ஈகை!

← பாடல் 2238பாடல் 2240 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்