நூல்கள்›புறநானூறு›பாடல் 2238

பாடல் 2238

சுவல் அழுந்தப் பல காய

சில் ஓதிப் பல் இளைஞருமே,

அடி வருந்த நெடிது ஏறிய

கொடி மருங்குல் விறலியருமே,

வாழ்தல் வேண்டிப் . . . .

பொய் கூறேன், மெய் கூறுவல்,

ஓடாப் பூட்கை உரவோர் மருக,

உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந,

மாயா உள்ளமொடு, பரிசில் துன்னிக்

கனி பதம் பார்க்கும் காலையன்றே, . . . .

ஈதல் ஆனான் வேந்தே, வேந்தற்குச்

சாதல் அஞ்சாய் நீயே, ஆயிடை,

இரு நிலம் மிளிர்ந்திசினாஅங்கு ஒரு நாள்

அருஞ்சமம் வருகுவதாயின்,

வருந்தலும் உண்டு, என் பைதலம் கடும்பே . . . .

சாதல் அஞ்சாய் நீயே!

← பாடல் 2237பாடல் 2239 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்