நூல்கள்›புறநானூறு›பாடல் 2236

பாடல் 2236

இரங்கு முரசின், இனம் சால் யானை,

முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை

இன்னும் ஓர் யான் அவாஅறி யேனே;

நீயே, முன்யான் அரியு மோனே! துவன்றிய

கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது, . . . .

கழைக் கரும்பின், ஒலிக்குந்து,

கொண்டல் கொண்டநீர் கோடை காயினும்,

கண் ணன்ன மலர்பூக் குந்து,

கருங்கால் வேங்கை மலரின், நாளும்

பொன் னன்ன வீ சுமந்து, . . . .

மணி யன்ன நீர் கடற் படரும்;

செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந!

சிறுவெள் ளருவிப் பெருங்கல் நாடனை!

நீவா ழியர் நின் தந்தை

தாய்வா ழியர் நிற் பயந்திசி னோரே! . . . .

நின்பெற்றோரும் வாழ்க!

← பாடல் 2235பாடல் 2237 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்