நூல்கள்›புறநானூறு›பாடல் 2219

பாடல் 2219

வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல்

கார்ப் பெயர் கலித்த பெரும் பாட்டு ஈரத்துப்,

பூழி மயங்கப் பல உழுது, வித்திப்

பல்லி ஆடிய பல்கிளைச் செவ்விக்

களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி, . . . .

மென் மயிற் புனிற்றுப் பெடை கடுப்ப நீடிக்,

கருந்தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து,

கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து,

வாலிதின் விளைந்த புது வரகு அரியத்

தினை கொய்யக், கவ்வை கறுப்ப, அவரைக் . . . .

கொழுங்கொடி விளர்க் காய் கோட்பதம்ஆக,

நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல்

புல் வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து.

நறுநெய்க் கடலை விசைப்பச் சோறு அட்டுப்,

பெருந் தோள் தாலம் பூசல் மேவர, . . . .

வருந்தா யாணர்த்து; நந்துங் கொல்லோ;

இரும்பல் கூந்தல் மடந்தையர் தந்தை

ஆடு கழை நரலும் சேட் சிமைப், புலவர்

பாடி யானாப் பண்பிற் பகைவர்

ஓடுகழல் கம்பலை கண்ட . . . .

செருவெஞ் சேஎய் பெருவிறல் நாடே!

கம்பலை கண்ட நாடு!

← பாடல் 2218பாடல் 2220 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்