பாடல் 2218
கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலைக்
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்பச்
செம்புற்று ஈயலின் இன் அளைப் புளித்து
மென் தினை யாணர்த்து நந்தும் கொல்லோ,
நிழலில் நீள் இடைத் தனி மரம் போலப், . . . .
பணை கெழு வேந்தரை இறந்தும்,
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே?
வேந்தரிற் சிறந்த பாரி!