நூல்கள்›புறநானூறு›பாடல் 2216

பாடல் 2216

மைம் மீன் புகையினும், தூமம் தோன்றினும்,

தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்,

வயல்அகம் நிறையப், புதற்பூ மலர,

மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்

ஆமா நெடு நிறை நன்புல் ஆரக், . . . .

கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப்,

பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத் ததுவே;

பிள்ளை வெருகின் முள் லெயிறு புரையப்

பாசிலை முல்லை முகைக்கும்

ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே . . . .

தந்தை நாடு!

← பாடல் 2215பாடல் 2217 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்