நூல்கள்›புறநானூறு›பாடல் 2215

பாடல் 2215

தீநீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக்

கூம்பவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல்,

ஏந்தெழில் மழைக் கண், இன் நகை, மகளிர்

புன் மூசு கவலைய முள் முடை வேலிப்,

பஞ்சி முன்றில், சிற்றில் ஆங்கண், . . . .

பீரை நாறிய சுரை இவர் மருங்கின்,

ஈத்திலைக் குப்பை ஏறி உமணர்

உப்பு ஓய் ஒழுகை எண்ணுப மாதோ;

நோகோ யானே; தேய்கமா காலை!

பயில் இருஞ் சிலம்பிற் கலை பாய்ந்து உகளவும், . . . .

கலையுங் கொள்ளா வாகப்,பலவும்

காலம் அன்றியும் மரம் பயம் பகரும்

யாணர் அறாஅ வியன்மலை அற்றே

அண்ணல் நெடுவரை ஏறித், தந்தை

பெரிய நறவின், கூர் வேற் பாரியது . . . .

அருமை அறியார் போர் எதிர்ந்து வந்த

வலம் படுதானை வேந்தர்

பொலம் படைக் கலிமா எண்ணு வோரே.

குதிரையும் உப்புவண்டியும்!

← பாடல் 2214பாடல் 2216 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்