நூல்கள்›புறநானூறு›பாடல் 2212

பாடல் 2212

மட்டு வாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும்,

அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும்

பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி,

நட்டனை மன்னோ, முன்னே; இனியே,

பாரி மாய்ந்தெனக், கலங்கிக் கையற்று, . . . .

நீர் வார் கண்ணேம் தொழுது நிற் பழிச்சிச்

சேறும் - வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே!

கோல் திரள் முன்கைக் குறுந் தொடி மகளிர்

நாறு இருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே.

பறம்பு கண்டு புலம்பல்!

← பாடல் 2211பாடல் 2213 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்