நூல்கள்›புறநானூறு›பாடல் 2204

பாடல் 2204

சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி,

தடவு வாய்க் கலித்த மா இதழ்க் குவளை

வண்டு படு புது மலர்த் தண் சிதர் கலாவப்,

பெய்யினும், பெய்யாது ஆயினும், அருவி

கொள் உழு வியன் புலத்து உழைகால் ஆக . . . .

மால்பு உடை நெடு வரைக் கோடு தொறு இழிதரும்

நீரினும் இனிய சாயல்

பாரி வேள்பால், பாடினை செலினே.

தேனாறும் கானாறும்!

← பாடல் 2203பாடல் 2205 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்