பாடல் 2203
போற்றுமின் மறவீர், சாற்றுதும் நும்மை,
ஊர்க் குறுமாக்கள் ஆடக் கலங்கும்
தாள் படு சின்னீர்க் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்பு உடைக் கராஅத்து அன்ன என்னை
நுண்பல் கருமம் நினையாது . . . .
இளையன் என்று இகழின், பெறல் அரிது ஆடே.
யானையும் முதலையும்!