நூல்கள்›புறநானூறு›பாடல் 2200

பாடல் 2200

ஒரு நாள் செல்லலம், இரு நாள் செல்லலம்,

பல நாள் பயின்று பலரொடு செல்லினும்,

தலை நாள் போன்ற விருப்பினன் மாதோ,

அணி பூண் அணிந்த யானை இயல் தேர்

அதியமான் பரிசில் பெறூஉங் காலம் . . . .

நீட்டினும் நீட்டாது ஆயினும், யானை தன்

கோட்டு இடை வைத்த கவளம் போலக்

கையகத்தது, அது பொய் ஆகாதே,

அருந்த ஏமாந்த நெஞ்சம்

வருந்த வேண்டா, வாழ்க அவன் தாளே . . . .

பலநாளும் தலைநாளும்!

← பாடல் 2199பாடல் 2201 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்