நூல்கள்›புறநானூறு›பாடல் 2196

பாடல் 2196

போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்,

உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின்,

ஊனுற மூழ்கி, உருவிழந் தனவே;

வேலே, குறும்படைந்த அரண் கடந்தவர்

நறுங் கள்ளின் நாடு நைத்தலின், . . . .

சுரை தழீஇய இருங் காழொடு

மடை கலங்கி நிலைதிரிந் தனவே;

களிறே, எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து, அவர்

குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின்,

பரூஉப் பிணிய தொடிகழிந் தனவே; . . . .

மாவே, பரந்தொருங்கு மலைந்த மறவர்

பொலம் பைந்தார் கெடப் பரிதலின்,

களன் உழந்து அசைஇய மறுக்குளம் பினவே;

அவன் தானும், நிலம் திரைக்கும் கடல் தானைப்

பொலந் தும்பைக் கழல் பாண்டில் . . . .

கணை பொருத துளைத்தோ லன்னே;

ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது? தடந்தாள்,

பிணிக் கதிர், நெல்லின் செம்மல் மூதூர்

நுமக்குஉரித்து ஆகல் வேண்டின், சென்றவற்கு

இறுக்கல் வேண்டும் திறையே; மறிப்பின், . . . .

ஒல்வான் அல்லன், வெல்போ ரான் எனச்

சொல்லவும் தேறீர் ஆயின், மெல்லியல்,

கழற் கனி வகுத்த துணைச் சில் ஓதிக்

குறுந்தொடி மகளிர் தோள்விடல்

இறும்பூது அன்று; அது அறிந்துஆ டுமினே . . . .

மூதூர்க்கு உரிமை!

← பாடல் 2195பாடல் 2197 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்