நூல்கள்›புறநானூறு›பாடல் 2197

பாடல் 2197

முனைத் தெவ்வர் முரண் அவியப்

பொர்க் குறுகிய நுதி மருப்பின் நின்

இனக் களிறு செலக் கண்டவர்

மதிற் கதவம் எழுச் செல்லவும்,

பிணன் அழுங்கக் களன் உழக்கிச் . . . .

செலவு அசைஇய மறுக் குளம்பின் நின்

இன நன்மாச் செயக் கண்டவர்

கவை முள்ளின் புழை யடைப்பவும்,

மார்புறச் சேர்ந்து ஒல்காத்

தோல் செறிப்பில் நின்வேல் கண்டவர் . . . .

தோள் கழியொடு பிடி செறிப்பவும்,

வாள் வாய்த்த வடுப் பரந்த நின்

மற மைந்தர் மைந்து கண்டவர்

புண்படு குருதி அம்பு ஒடுக்கவும்

நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென, . . . .

உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும்

சுற்றத்து அனையை; ஆகலின்,போற்றார்

இரங்க விளிவது கொல்லோ; வரம்பு அணைந்து

இறங்குகதிர் அலம்வரு கழனிப்,

பெரும்புனல் படப்பை, அவர் அகன்றலை நாடே; . . . .

வளநாடு கெடுவதோ!

← பாடல் 2196பாடல் 2198 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்