நூல்கள்›புறநானூறு›பாடல் 2190

பாடல் 2190

வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்

களம் படக் கடந்த கழல் தொடி தடக்கை,

ஆர்கலி நறவின் அதியர் கோமான்!

போர் அடு திருவின் பொலந்தார் அஞ்சி!

பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி . . . .

நீலமணி மிடற்று ஒருவன் போல

மன்னுக பெரும! நீயே தொன் நிலைப்

பெருமலை விடர் அகத்து அரு மிசை கொண்ட

சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,

ஆதல் நின் அகத்து அடக்கிச் . . . .

சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே.

எமக்கு ஈத்தனையே!

← பாடல் 2189பாடல் 2191 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்