பாடல் 2183
என் ஐ புற்கை உண்டும் பெருந்தோளன்னே;
யாமே புறஞ்சிறை இருந்தும் பொன் அன்னம்மே;
போர் எதிர்ந்து என் ஐ போர்க்களம் புகினே
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்,
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு . . . .
உமணர் வெரூஉம் துறை அன்னன்னே.
புற்கையும் பெருந்தோளும்!