நூல்கள்›புறநானூறு›பாடல் 2181

பாடல் 2181

சாறுதலைக் கொண்டெனப், பெண்ணீற்றுற்றெனப்

பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்,

கட்டில் நிணக்கும் இழிசினன் கையது

போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ;

ஊர்கொள வந்த பொருநனொடு, . . . .

ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே!

ஊசி வேகமும் போர் வேகமும்!

← பாடல் 2180பாடல் 2182 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்