நூல்கள்›புறநானூறு›பாடல் 2179

பாடல் 2179

இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்,

மைந்துடைமல்லன் மதவலி முருக்கி,

ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால்

வருதார் தாங்கிப் பின்னெதுங் கின்றே;

நல்கினும் நல்கான் ஆயினும், வெல்போர்ப் . . . .

போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம -

பசித்துப் பணைமுயலும் யானை போல,

இருதலை ஒசிய எற்றிக்,

களம்புகும் மல்லன் கடந்துஅடு நிலையே.

காணாய் இதனை!

← பாடல் 2178பாடல் 2180 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்