பாடல் 2178
மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி,
மன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்து,
தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி,
வெம்போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே; . . . .
எஞ்சுவர் கொல்லோ, பகல்தவச் சிறிதே?
பகலோ சிறிது!