நூல்கள்›புறநானூறு›பாடல் 2177

பாடல் 2177

வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்,

அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்து,

அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன

மலைப்பரும் அகலம் மதியார், சிலைத்தெழுந்து,

விழுமியம், பெரியம், யாமே; நம்மிற் . . . .

பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது என,

எள்ளி வந்த வம்ப மள்ளர்

புல்லென் கண்ணர்; புறத்திற் பெயர,

ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான்; ஆண்டுஅவர்

மாண்இழை மகளிர் நாணினர் கழியத், . . . .

தந்தை தம்மூர் ஆங்கண்,

தெண்கிணை கறங்கச்சென்று, ஆண்டு அட்டனனே.

அவர் ஊர் சென்று அழித்தவன்!

← பாடல் 2176பாடல் 2178 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்