நூல்கள்›புறநானூறு›பாடல் 2174

பாடல் 2174

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்

பால் தர வந்த பழ விறல் தாயம்

எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு என

குடி புரவு இரக்கும் கூரில் ஆண்மைச்

சிறியோன் பெறின், அது சிறந்தன்று மன்னே, . . . .

மண்டு அமர்ப் பரிக்கும் மதனுடை நோன் தாள்

விழுமியோன் பெறுகுவன் ஆயின், தாழ் நீர்

அறு கய மருங்கின் சிறு கோல் வெண்கிடை

என்றூழ் வாடு வறல் போல, நன்றும்

நொய்தால் அம்ம தானே, மையற்று . . . .

விசும்புற ஓங்கிய வெண்குடை

முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே.

அரச பாரம்!

← பாடல் 2173பாடல் 2175 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்