நூல்கள்›புறநானூறு›பாடல் 2171

பாடல் 2171

நகுதத் கனரே, நாடு மீக் கூறுநர்;

இளையன் இவன் என உளையக் கூறிப்

படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்

நெடுநல் யானையும், தேரும், மாவும்,

படைஅமை மறவரும், உடையும் யாம் என்று . . . .

உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச்

சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை

அருஞ்சமஞ் சிதையத் தாக்கி, முரசமொடு

ஒருங்கு அகப் படேஎன் ஆயின்; பொருந்திய

என் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது, . . . .

கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்,

குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி

மாங்குடி மருதன் தலைவன் ஆக,

உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் . . . .

புலவர் பாடாது வரைக, என் நிலவரை;

புரப்போர் புன்கண் கூர,

இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.

இனியோனின் வஞ்சினம்!

← பாடல் 2170பாடல் 2172 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்